14 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை! 4 பேர் கைது!

கிரைம் நியூஸ் தமிழகம்
baby 1
baby 1

ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கர்பமாக்கிய இளைஞன் உட்பட சிறுமியை பெற்றோரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயதுள்ள சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி அவரது அத்தை மகனை காதலித்து அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞனும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சில மாதங்கள் முன்பு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் சிறுமி கர்பமடைந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அவருடைய அத்தை மகனை சிறுமியுடன் ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான சிறுமி சில தினங்களுக்கு முன் பிரசவத்திற்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.

தற்போது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் சிறுமியின் வயதை உறுதிசெய்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி 14 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்பமாக்கியை அத்தை மகன் உட்பட ரகசியமாக திருமணம் செய்து வைத்த 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.