சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 35 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

உலகம் சற்றுமுன்

17 May28 Syria - 2026சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பவதி விலகக் வேண்டி 2011-ல் புரட்சி வெடித்தது. ஆனால் அவர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பதால் அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்க புரட்சியாளர்கள் மீது அந்நாட்டு ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக அமெரிக்கா கூட்டுப்படையும் போரிட்டு வருகிறது. இந்த போரில் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சிரியாவுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் முதல் கட்டமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்து உள்ளனர். இந்த தீவிரவாதிகளை அழிப்பதற்கு ரஷ்ய விமானபடையுடன் சேர்ந்து சிரியா நாட்டின் முப்படைகளும் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மயாதின் என்ற நகரில் சிரியா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் என்றும் , 9 பேர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.