டாஸ்மாக் வருமானம் குறைந்து போனதாம்… கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை!

சற்றுமுன் தமிழகம்

TASMAC - 2026

சென்னை: தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியான தகவலின் படி, டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட குறைந்து போனதாகக் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் ரூ.26,995 கோடியிலிருந்து ரூ.26,794 கோடியாகக் குறைவு என்று மதுவிலக்கு ஆய்த்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், 1,250 டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அந்த கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.