செய்த தவறுகளை மறைப்பதற்காகவே திமுக போட்டி சட்டசபை நடத்தியது; திமுக உறுப்பினர்களை நாங்கள் பேரவையை விட்டு போக சொல்லவில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் உண்மை வெளிவந்துவிடுமோ என திமுகவினர் பயப்படுகின்றனர் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுக மீது தவறான தகவல்களைக் கூறவில்லை; திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட்டிற்கு 230 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் ஆலைக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்தே நான் கூறினேன் என்று பேசினார்.
மாதிரி சட்டமன்றத்தில் திமுக உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறியுள்ளது; ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்ததை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார் முதல்வர்.




