காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரனை 3 ஆண்டுகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக பணிபுரியும் ராஜேந்திரன், கல்வி மற்றும் நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் கொண்டவர். 27 ஆண்டுகளாக ஆசிரியராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயக்குனர் மற்றும் துறை தலைவராகவும் அவர் பணிபுரிந்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




