ஹாக்கி வீராங்கனையாக மாறிய நடிகை டாப்சி

சினி நியூஸ் சினிமா

sorrma1 - 2026

தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ அஜித் நடித்த ‘ஆரம்பம்’ போன்ற படங்களில் நடித்து வந்த நடிகை டாப்சி தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்று சூர்மா’. இந்த படம் பிரபல ஹாக்கி வீரர் சந்தீப் சிங் வாழ்க்கை வரலாற்று படம் ஆகும்

இந்த படத்தில் டாப்சியும் ஹாக்கி வீராங்கனையாக நடிக்கின்றார். இந்த கேரக்டரில் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக டாப்சி தற்போது நிஜமாக ஒரு பயிற்சியாளரின் உதவியுடன் ஹாக்கி வீராங்கனையாக மாறி வருகிறார்.

soorma - 2026இதுகுறித்து டாப்சி கூறியபோது, ‘‘எனக்கு விளையாட்டு என்றால் கொள்ளை பிரியம். இந்த படத்துக்காக ஹாக்கி கற்றுக்கொண்டது மறக்க முடியாத அனுபவம். பொதுவாக விளையாட்டு வீராங்கனை என்றால் கடினமானவராக இருக்க வேண்டும். ஆனால் நான் மிகவும் மென்மையானவள். எனவே விளையாட்டு வீராங்கனையாக மாறியது பெரிய சவாலாக இருந்தது. நான் இதற்கு முன்பு ஹாக்கி விளையாட்டை தொலைக்காட்சியில் கூட பார்த்தது இல்லை. ஆனால் ஒரு இந்திய குடிமகளாக சந்தீப் சிங் பற்றி அறியாமல் இருந்ததை எண்ணி வெட்கப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

தில்ஜித் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை சையத் அலி இயக்குகிறார். ஷங்கர் ஈசான் லாய் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.