தமிழக அரசியல் சூழல் குறித்து கமலுடன் பேச்சு: ராகுல்

இந்தியா சற்றுமுன்

kamal rahul - 2026

காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பாகவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன் என்று கூறினார் ராகுல் காந்தி.

புது தில்லி சென்றுள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ராகுலுடன் அரசியல் குறித்து பேசினேன். ஆனால் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்றார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து ராகுல் டுவிட்டரில் கூறியதாவது:

கமலுடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது.அப்போது இரு கட்சிகள் குறித்தும், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.