நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால்… சர்க்கார் படம் எந்த தியேட்டர்லயும் ஓடாது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை

07 June18 Ramadoss - 2026

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸும் நடிகர் விஜயும் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டிய பாமக., நிறுவனர் ராமதாஸ், தான் மட்டும் பழைய ராமதாஸாக இருந்திருந்தால், சர்க்கார் படம் எந்த திரையரங்கிலும் ஓடாது என்று கூறினார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக.,வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசினார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

அப்போது அவர், சர்கார் திரைப்பட விளம்பரத்தில் நடிகர் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டரைப் பார்த்ததும் எனக்கு கடும் கோபம் வந்தது. நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால் சர்க்கார் திரைப்படம் எந்த திரையரங்கிலும் ஓட முடியாதபடி தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன் என்று கூறிய ராமதாஸ், ஆனால் தற்போது சர்க்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெறக் கூடாது என்று விஜய், சன் பிக்சர்ஸுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

sarkar vijay cry - 2026

மேலும், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நடிகர் விஜயும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸும் கோடி கோடியாக வாங்கிக் கொண்டுதான், இப்படி புகை பிடிக்கும் காட்சியை சர்கார் படத்தில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளுடன் எந்தப் படத்தையும் இனி அனுமதிக்க முடியாது என்று எச்சரித்தார் டாக்டர் ராமதாஸ்.

1 thought on “நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால்… சர்க்கார் படம் எந்த தியேட்டர்லயும் ஓடாது!”

  1. சபாஷ், இதைப்போல உங்களின் எதிர்ப்புகள் மக்களை சென்றடையுமா? தீய சக்திகள் தடை செய்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? சரண்டர் என்ற பார்முலாவை பிரயோகப்படுத்த மாட்டீர்கள் என்பதற்கு என்பதற்கு என்ன உத்திரவாதம் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.