ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சத்ய ஸ்ரீ இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் சத்ய ஸ்ரீ ஷர்மிலா. இவா் ஏற்கனவே வழக்கறிஞராவதற்கான தகுதி பெற்றிருந்த போதிலும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைத்த பின்னரே வழக்கறிஞராக பொறுப்பேற்பேன் என்று உறுதியுடன் இருந்தாா். இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னா் சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்ய ஸ்ரீ இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பின்தங்கியுள்ள சமுதாயத்தில் இருந்துவந்த தனக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் எனக்கும் மட்டுமல்லாமல் என் திருநங்கை சமுதாயத்திற்கும் கிடைத்த பெருமை. இன்னும் எங்கள் சமுதாயம் நிறைய அங்கீகாரங்களை பெறவேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.



