சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூர்க்கு முன் ஜாமீன்

இந்தியா சற்றுமுன்

06 July05 tharoor - 2026டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூர்க்கு 1 லட்ச ரூபாய் பிணைத்தொகையுடன் முன் ஜாமீன் வழங்கியது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர், சசி தரூருக்கு மூன்றாவது மனைவி ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் சுனந்தா புஷ்கர். பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருடன் சசி தரூர் கொண்ட நட்பே, சுனந்தா புஷ்கரை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்பட்டது. இதனால், சுனந்தா புஷ்கரின் மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, சுனந்தா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில், டெல்லி நீதிமன்றத்தில் சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸார், `சுனந்தா தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சசிதரூக்கு முன் அஞ்சல் அனுப்பியதாகவும் அதில் தனக்கு வாழப் பிடிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளதாக சசிதரூக்கு எதிராக ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார் சசி தரூர். இம்மனு மீதான விசாரணையின் போது சசிதரூக்கு முன்ஜாமீன் வழங்க சிறப்பு புலனாய்வுக் குழு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இன்று சசிதரூரின் முன்ஜாமீன் மனு விசாரணை வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் பிணைத்தொகையுடன் முன் ஜாமீன் வழங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.