இன்று விசாரணைக்கு வருகிறது ஓரின சேர்க்கையாளர்களுக்கான வழக்கு

இந்தியா சற்றுமுன்

supreme court of india - 2026கடந்த, 2013ம் ஆண்டில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில், வழங்கப்பட்ட தீர்ப்பை, மறுபரிசீலனை செய்வதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு, 377ன்படி, இயற்கைக்கு மாறாக, ஆண், பெண் அல்லது விலங்கினங்களுடனான உறவு தண்டனைக்குரியது. இந்த குற்றத்துக்கு, ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்க பரிந்துரைக்கிறது. கடந்த, 2013ம் ஆண்டில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ‘இயற்கைக்கு மாறான எந்த உறவும் சட்ட விரோதம்’ என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய, டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி, ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள், நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு ஏற்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.