கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது – மு.க. ஸ்டாலின்

சற்றுமுன் தமிழகம்

01 July31 M K Stalin - 2026கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோபாலபுரம் வீட்டிலேயே டாக்டர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு, கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் உடல் நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் காவேரி ஆஸ்பத்திரிக்கு கருணாநிதி கொண்டு செல்லப்பட்டார்.

காவேரி ஆஸ்பத்திரியில் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான் தலைமையில், இலங்கை மந்திரிகள் செந்தில் தொண்டைமான், ராமேஸ்வரன் ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.