டெங்குவுக்கு 5 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சற்றுமுன் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

radhakrishnan J - 2026

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 5 பேரும், பன்றிக் காய்ச்சலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 27 குழந்தைகளில் 10 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பை கையாள்வது குறித்து தனியார் மருத்துவமனைகளுக்கு நாளை ஆலோசனை வழங்கப் படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

போலியான மருந்தை வழங்கி வந்த 840 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர் என்று கூறினார் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.