ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

Published:

04 Oct22 dhin Hockey India - 2026

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், ஒமான் அணிகள் ஆகிய 6 அணிகள் மோதும் இந்த தொடர், மஸ்கட்டில் நடைபெற்று வருகிகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஒமான் அணியை 11-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. அடுத்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய பரபரப்பான லீக் ஆட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கிய சில விநாடிகளிலேயே பாகிஸ்தான் அணியின் இர்பான் ஜூனியர் அபாரமாக கோல் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். எனினும், நம்பிக்கையுடன் ஒருங்கிணைந்து விளையாடிய இந்திய வீரர்கள் பாக். அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். 24வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

அதே உற்சாகத்துடன் தாக்குதலைத் தொடர்ந்த இந்திய அணிக்கு மன்தீப் சிங் (33வது நிமிடம்), தீல்பிரீத் (42வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினர். பதில் கோல் அடிக்க பாகிஸ்தான் வீரர்கள் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்தியா தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Related articles

Recent articles

spot_img