தாமிரபரணி புஷ்கர விழா மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி

சற்றுமுன் தாமிரபரணி புஷ்கரம் நெல்லை

krishnasamy dr - 2026

தாமிரபரணி மகாபுஷ்கர விழா, மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

தாமிரபரணி புஷ்கர விழாவில் புனித நீராட வந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டவை…

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா புஷ்கரம் நிகழ்ச்சி தாமிரபரணி நதியில் நடைபெற்று வருகிறது. பன்னிரண்டு நாள் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று கலந்து கொண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து போது.

தாமிரபரணி நதி தமிழ்நாட்டு அளவில் மட்டும் அறியப்பட்ட நிலையில் புஷ்கரணி விழாவின் மூலம் இந்தியா அளவில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் இந்திய அளவில் நதிகளை ஒன்றிணைப்பது மட்டுமன்றி இந்திய மக்கள் அனைவரும் ஒன்று என்று எண்ணும் வகையில் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது.

– என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.