ரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்!

சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்

soundarya visakan - 2026

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், வரும் தை மாதத்தில் இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.

தன் மகனுடன் சென்னை போயஸ் தோட்டம் வீட்டில் பெற்றோருடன் சௌந்தர்யா வசித்து வருகிறார். திரைபடத் தயாரிப்பு, இயக்கம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கோவையைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., – எஸ்.எஸ்.பொன்முடியின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். இவரும், ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர். தேவர் சமுதாயத்தை சேர்ந்த விசாகனுக்கும் சௌந்தர்யாவுக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது. இருவரின் திருமணம் வரும் தை மாதத்தில் நடைபெறவுள்ளது.

விசாகன் வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிப்பை முடித்துவிட்டு சென்னையில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். தற்போது 34 வயதாகும் சௌந்தர்யா விசாகனை விட 6 வயது மூத்தவர் என்று கூறப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.