கஜா புயல் காரணமாக 100 கி.மீ வேகம் காற்று வீசக்கூடும் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சென்னை வானிலை மைய முன்னள் இயக்குநர் ரமணன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரமணன் கூறும் வானிலை அறிவிப்புகள் மிகவும் ரசிக்கப் பட்டவை. குறிப்பாக சிறுவர்கள், பெண்களை மிகவும் கவர்ந்தவை. பல்வேறு புயல்கள், மழை, வெள்ளம் இவற்றின் போது ரமணன் கூறும் ஸ்டைலுக்கு ரசிகர்கள் பலர்.
தற்போது, கஜா புயல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ரமணன் இது தொடர்பாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், தானே, வர்தா புயலின் போது 140 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பாதிப்பு அதிகளவில் இருந்தது. மேலும் மீனவர்களுக்கு நேவிகேஷன் கருவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது… என தெரிவித்துள்ளார்.




