கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற நபருக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

tiruppur court - 2026

திருப்பூரில் கள்ளக் காதலியை எரித்துக் கொன்ற குற்றவாளி சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.

மதுரையைச் சேர்ந்த சிவா, கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். திருச்சியைச் சேர்ந்த சித்ரா கட்டிடத் தொழிலாளி. இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சரவணன் மற்றும் சித்ரா ஆகிய இருவரும் ஒரே கட்டிடத்தில் கட்டிட வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் தங்கள் குழந்தைகளைப் பிரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பமாக தங்கி வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரம் அடைந்த சரவணன், சித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்

இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது

வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மேலும் அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து குற்றவாளி சரவணனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.