
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றம் இது. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யில் லட்சக்கணக்கான மக்கள் சேமிப்பு கணக்கு, பென்சன் கணக்கு மற்றும் சம்பள கணக்குகளை தொடர்கின்றனர்.
மக்களின் வசதிக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் யோனோ மற்றும் யோனோ லைட் ஆப்கள் நடைமுறையில் உள்ளன. இவை அனைத்து விதமான ஸ்மார்ட் போன் பயனாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல், ரீசார்ஜ் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றன.
வாடிக்கையாளர்கள் சேவையில் பெரும் கவனம் செலுத்தும் எஸ்பிஐ சமீப காலமாக பல்வேறு வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது.
அண்மையில் கூட பண்டிக்கைகால சலுகையாக ஹோம் லோனில் வட்டி விகிதத்தை குறைத்து அதற்கான செயலாக்க கட்டணத்தை முழுமையாக குறைத்துள்ளது.
எஸ்பிஐ யோனோ 34.5 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டுள்ளது. இப்படி பல சேவைகளை வழங்கி வரும் எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் கடைகள், ஈகாமர்ஸ் தளங்கள், மொபைல் ஷாப்பிங் செயலிகள் மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் கடனை ஈஎம்ஐ-ஆக மாற்றும் சேவை அளிக்கப்படுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஈஎம்ஐ-க்கும் அப்படிக் கடனை ஈஎம்ஐ-ஆக மாற்றிய பின்பு செலுத்தி கொள்ளலாம். இது தற்போது வரை நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம்.
ஆனால் இனிமேல் ஒவ்வொரு இஎம்ஐ-க்கும் இனி கூடுதலாக 99 ரூபாய் பிராசசிங் கட்டணமும் அதற்கான வரியும் விதிக்கப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டணம் ஈஎம்ஐ-ஆக மாற்றிய பின்பு செலுத்தப்படும் ஈஎம்ஐ-க்கு மட்டுமே விதிக்கப்படுகிறது.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் மெர்சன்ட் ஈஎம்ஐ பரிமாற்றங்களுக்கு 99 ரூபாய் பிராசசிங் கட்டணமும் அதற்கான வரியும் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
அதே நேரம் கேன்செல் அல்லது ரத்துச் செய்யப்பட்ட ஈஎம்ஐ பரிமாற்றங்களுக்கும் எவ்விதமான கட்டணமும் வரியும் இல்லை. இன்னும் 17 நாட்களில் அதாவது வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துவிடும்.