
கேரளா பிஎஃப்ஐ.,-எஸ்டிபிஐ., (PFI – SDPI)யினரால் ஆர்எஸ்எஸ்.,காரர் வெட்டிக்கொலை
பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளியை சேர்ந்தவர், சஞ்சித். 15 நவம்பர் 2021 அன்று,கேரளாவின் பாலக்காடு மாம்பரம் என்ற இடத்தில், சஞ்சித் என்ற ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் PFI-SDPIயினரால் கொல்லப்பட்டார்.
சஞ்சித் தனது மனைவியுடன், வீட்டில்இருந்து வந்து கொண்டிருந்தபோது, நான்கு பேர் கொண்ட குழு, காரில் பின்தொடர்ந்து, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில், காலை 9 மணிஅளவில் அவரது பைக்கை நிறுத்தி, அவரது மனைவிக்கு முன்னால், அவரை வெட்டிக்கொன்றனர்.
2019 முதல் சஞ்சித்தை குறிவைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. SDPI செயற்பாட்டாளர் ஆஷிக்கின் முகநூல் பதிவு, இந்த செய்தியினை தெரிவிக்கிறது.

2019ல் ஒரு பதிவில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சஞ்சித்தை, SDPIயினர் தாக்குவார்கள் என்று பதிவிட்டு உள்ளார். இதற்கு முன்பும், சஞ்சித் மீது கொலை முயற்சிகள் நடந்தன. எனவே, அவரது கொலையானது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பது தெளிவாகிறது.

சஞ்சித் கொலை செய்யப்பட்ட இடத்தைப் பார்த்த பாலக்காடு மருதுரோட்டைச் சேர்ந்த, ராமு என்ற 56 வயது நபர், அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, திருச்சூர் சாவக்காட்டில்,SDPI கட்சியினரால், பாஜக தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்திற்குள், இது இரண்டாவது கொலை.
பாலக்காட்டைச் சேர்ந்த இஸ்லாமிய இல்லங்களை, அடையாளம் கண்ட 100 பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல், அங்கு உள்ளவர்களை மிரட்டி, இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர், ஞாயிறு அன்று நடந்த இந்த சம்பவத்திற்கு SDPI, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர், வழக்கும் பதிந்து உள்ளனர். இனி, இது போன்ற செயல்களில் ஈடுபட முடியாத படி, நாங்கள் செய்வோம். முன்பு போல அல்ல, இது நாங்கள் உள்ள பகுதி. இனி, ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரனும் இங்கே இல்லாமல் நாங்கள் அழித்து விடுவோம்… என்று சமூகத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.



