சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஒரு வருடம் நீட்டிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

pon manikkavel - 2026

சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஒரு வருட காலத்திற்கு பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுவார் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொன்.மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், அவரை சிறப்பு அதிகாரியாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம். முன்னதாக, சிலைக்கடத்தல் பிரிவு ஏடிஜிபி.,யாக அபய்குமார் சிங்கை நியமித்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.