பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம் இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை ஏ.டி.எம் தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது, டில்லி – ஹரியானா எல்லையில் உள்ள, குருகிராம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு ஆகிய இடங்களில், இந்த நவீன, ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட்டுள்ளன. விரைவில், நாட்டின் முக்கிய நகரங்களில், இவ்வகை இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.




