மயிலாப்பூர் கோயில் மயில் மாற்றப்பட்ட விவகாரத்தில் கைதான திருமகளுக்கு ஜாமின்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
thirumagal hrnce addl commissioner - 2026

கும்பகோணம் : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் இவர், உடனடியாக கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று இவருக்கு ஜாமின் வழங்கி கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரால் தேடப்படும் நபராக இருந்த அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், தலைமறைவாக இருந்ததாகக் கூறப் படுகிறது. இதனிடையே இவர் நேற்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப் பட்டார். பின்னர் கும்பகோணத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.