நயன்தாரா நட்ட கிறிஸ்துமஸ் மரம்… விழாவுக்கு தயாராகி விட்டாராம்!

Reporters Diary கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
nayantara christmastree - 2026

கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப் படவுள்ள நிலையில், நடிகை நயன்தாரா ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை ‘நட்டு’ விழாவுக்கு தயாராகி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். படப்பிடிப்பும் படபடப்பும் இல்லாத நாட்களில் இருவரும் ஹாய்யாக ஜோடி போட்டு ஊர் சுற்றி வருகிறார்கள். அந்தப் புகைப்படங்களையும் இணையதளங்களில் வெளியிட்டு உசுப்பேத்தி வருகின்றனர்.

இப்போது பண்டிகை சீஸன். கிறிஸ்துவரான நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு தயாராகி விட்டார். அவரும், அவரின் காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து கிறிஸ்துமஸ் மரம் தயார் செய்துள்ளனர்.

இந்தப் படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நயன்தாரா “கிறிஸ்துமஸ் மரம் ரெடி ஆகிவிட்டது. இனி கொண்டாட்டம்தாம்” என பதிவிட்டுள்ளார். மேலும், வழக்கம்போல், அவர்கள் தயார் செய்த மரத்தின் அருகே காதலருடன் நின்று செல்பி எடுத்து அதையும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

இதைக்கண்டு ரசிகர்கள் சிலர் “வாவ்.. சூப்பர் ஜோடி..! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” என பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் இருவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைச் சொல்லி, மரங்களை வெட்டாமல், இயற்கையை சிதைக்காமல், மெழுகுவர்த்தி ஏற்றி காற்றில் நஞ்சைக் கலக்காமல், அதிக அளவு மின்விளக்குகளை எரியவிட்டு, பூமியை சூடாக்காமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.