
காஜு ஸ்வீட் பிரெட்
தேவையானவை:
இரண்டாக உடைத்த முந்திரி – 25 கிராம்,
சர்க்கரைத்தூள் – ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
இனிப்பு பிரெட் துண்டுகள்
(ஓரம் நீக்கி, சிறிய சதுரங்களாக நறுக்கியது), – ஒரு கப்
நெய் – 50 கிராம்,
தேன், உலர் திராட்சை – சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் நெய்யைச் சூடாக்கி… முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் பிரெட் துண்டுகளைச் சிறிது சிறிதாகப் போட்டு மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வறுத்த பிரெட் துண்டுகள், முந்திரி, திராட்சை, சர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.
இதைக் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.