மாணவர்களை நல்வழிப் படுத்த வேண்டிய கல்லூரி… இப்படி செய்திருக்கக் கூடாது: இயக்குனர் பேரரசு!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
perarasu director - 2026

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திரைப்பட இயக்குனர் பேரரசு சுவாமி தரிசனத்துக்கு இன்று வந்திருந்தார்.

பௌர்ணமி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்த திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் நவக்கிரக சன்னதியில் வழிபட்டார்.

அவரிடம் செய்தியாளர் ஒருவர், லயோலா கல்லூரியில் இந்து தெய்வங்கள் அவமதிப்பு செய்யப் பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த இயக்குனர் பேரரசு… தமிழனையும் தமிழகத்தையும் பொறுத்தவரை எந்த தெய்வங்களை யார் அவமானப் படுத்தினாலும் அதனை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள்தான் அதிகம்! ஆனால் தற்போது ஒரு புகழ் பெற்ற கல்லூரி இந்த செயலில் ஈடுபட்டது கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கல்லூரி இதுபோன்ற செயல்களை நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும்!

தெய்வங்களை அவமானப்படுத்துவதை எந்த வகையிலும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கல்லூரியில் இந்த மாதிரி மத மோதல்களை தூண்டி விடுவதற்கு பதில் வேறு ஏதேனும் செயல்கள் செய்யலாம் என்றார் பேரரசு.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.