மதுரை சம்பவம்: உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.

கோயிலைச் சுற்றியுள்ள கடைகள் விதிகளை மீறி அமைக்கப் பட்டு உள்ளன என வழக்கறிஞர்  முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்துள்ள மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, கடந்த வாரம் வெள்ளிக் கிழமை இரவு மதுரை கோவிலின் கிழக்குப் பகுதி கோபுரத்தை ஒட்டிய கடைகளில் தீப் பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.