2019ல்… பள்ளிகளுக்கு… டீச்சர்களுக்கு… அடேங்கப்பா… இவ்ளோ நாள் லீவா…?!

கல்வி சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
06 May31 schools - 2026

2019 -ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறைதான்!

ஆம்… 2019ஆம் ஆண்டில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான, அனைத்து அரசுப் பள்ளிகளின் பணி நாட்கள் தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், வரும் 2019ஆம் ஆண்டில், பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை நாட்களாம்! இவற்றிலும், ஐந்து நாட்கள் உள்ளூர் பண்டிகை மற்றும் மழைக்கால விடுமுறையாகக் கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கு ஏற்ப

பாட அட்டவணை தயாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. மாணவர்களுக்குத்தான் இவ்வளவு நாட்கள் என்று இல்லை… ஆசிரியர்களுக்கும் வழக்கம் போல் லீவுகள்தான்! ஏப்ரல், மே மாதங்களில் 47

நாட்கள் கோடை விடுமுறை மற்றும் பொதுத் தேர்வுக்கான விடை திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தனியாக ஊதியம் எல்லாமும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.