காங்கிரஸின் வேலைநிறுத்தம் தொழிலாளிக்காக அல்ல.. தேர்தலுக்காக! பகிரங்கப் படுத்திய கடிதம்!

Reporters Diary ஃபோட்டூன் அடடே... அப்படியா? சற்றுமுன்
intuc bms - 2026

ஐஎன்டியூசி தலைவர் சஞ்சீவி ரெட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி எழுதியுள்ள கடிதம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

அதில் 12 கருத்துகளை அவர் ராகுல் காந்திக்கும் தெரிவித்துள்ளார் அதன் சாராம்சமாக கூறப்படுவது ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவி ரெட்டி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வேலைநிறுத்தம் தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தின் சாரம்…

ஜனவரி 8 9 ஐஎன்டியூசி தலைமையில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் மேலும் தொழிலாளர்களுக்கு சாதகமான தலைவராக தங்களை பயன்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் அது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு சாதகமாக பிரதிபலிக்கும்

தொழிலாளர்களே சஞ்சீவி ரெட்டி அவர்களின் கடிதத்தின் மூலம் இந்த வேலை நிறுத்தம் தொழிலாளர்களுக்காக இல்லை என்பது முழுக்க முழுக்க எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி நடைபெற உள்ளது என்பதும் வெட்டவெளிச்சமாகிறது எனவே சிந்திப்பீர் செயல்படுவீர் என்று பாரதத்தின் முதன்மை தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டு சமூகவலைதளங்களில் சுற்றி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.