மக்கள் கோபம்… சுவர் ஏறிக் குதித்து தப்பிய அமைச்சர்…! காப்பாற்றிய டூவீலர்!

Published:

osmanian escaping - 2026 புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட வரும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினரை மக்கள் பல இடங்களிலும் வழிமறித்து தங்களது ஆவேச எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவு கோபத்துக்கு உள்ளாகி இருப்பவர் உள்ளூர் அமைச்சரான ஓ எஸ் மணியன் தான்!

ஓ.எஸ். மணியன்,  நேற்று வேதாரண்யம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் வந்த போது, மக்கள் மிகவும் கோபத்துடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்தார். உடனே, சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடினார். இந்தக் காட்சிகள் பேஸ்புக் வலைத்தளங்களிலும் இன்றைய நாளிதழ் தலைப்புகளிலும் இடம்பெற்று மானத்தை வாங்கி விட்டது.

சுவர் ஏறிக் குதித்து தப்பித்து ஓடிய அமைச்சர் அடுத்து என்ன ஆனார் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக ஒரு செல்போனுடன் வீடியோ எடுத்தபடி ஒருவர் அமைச்சர் பின்னேயே துரத்திக் கொண்டு சென்றுள்ளார்.

சுமார் ஒன்றரை நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் தனது காரை விட்டு விட்டு டூவீலர் ஒன்றில் ஏறி அமர்ந்து அமைச்சர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் அதையும் மீறி மக்கள் அமைச்சரை வறுத்தெடுப்பதும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. இப்போத் அந்த வீடியோ பேஸ்புக் வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அமைச்சரைக் காப்பாற்றி அழைத்துச் சென்ற அந்த டூவீலர் விசுவாசி யார் என்று இப்போது மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img