திருவாரூர் அமமுக வேட்பாளராக காமராஜ்! அறிவித்தார் தினகரன்

உள்ளூர் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல்
kamaraj thiruvarur ammk - 2026

தலைமைக் கழக அறிவிப்பு என்ற பெயரில் 28 1 2019 அன்று நடைபெற உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ் காமராஜ் அறிவிக்கப்படுகிறார் என்றும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கழகம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் பெயரிடப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பில் எவர் கையெழுத்தும் இடப்படவில்லை.

டிடிவி தினகரன் எஸ் காமராஜ் பெயரை திருவாரூர் தொகுதிக்கான அமுக்க வேட்பாளராக அறிவித்து உள்ளார். திமுக தலைவராக இருந்த கருணாநிதி உயிரிழந்ததை அடுத்து திருவாரூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.