திருவிடந்தை கோயிலில் வெங்கய்ய நாயுடு தரிசனம்!

உள்ளூர் செய்திகள் சென்னை லைஃப் ஸ்டைல்
vengaiah naidu thiruvidanthai - 2026

திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் சன்னதியில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஸ்வாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது.

4 நாள் பயணமாக குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னை வந்திருந்தார். சென்னையில் தனது மகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வெங்கய்ய நாயுடு, மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், திருவிடவெந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட தலங்களை பார்வையிட்டார்.

அவருக்கு நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு, மரியாதை செய்யப் பட்டது.

சென்னையில் தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, வியாழக் கிழமை இன்று தில்லி திரும்பினார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.