காமன் துணைப்பொருள்கள்
வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
மேல்விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
வேழம்கெ டாதஇருள் ஆம்;
வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
மனதேபெ ரும்போர்க் களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
சார்இரதி யேம னைவிஆம்;
தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
தவறாதி ருக்கும் இடம்ஆம்;
அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
ஆற்றல் அற்றவர்கள்
எல்லாருக்கும் அமுதம் போன்றவனே!, அருமை தேவனே!, ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு, கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும், அம்பு கரிய வண்டின் கூட்டம் (ஆகும்). (உயிர்களின்) மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும், தேர் உலவும் தென்றற் காற்று (ஆகும்), குதிரைகள் பச்சைக் கிளிகளே (ஆகும்).
யானை அழியாத இருளாகும். மிகுபடை பெண்கள்
(ஆவர்), உடைவாள் உடைவாள் தாழை மடல் (ஆகும்), போர் முரசு நீண்ட கொடைத்தன்மை
பொருந்திய கடலாகும், கொடி மகர மீன் ஆகும், சின்னம் (வேனிலில்) வரும் குயிலாகும், பெரிய போர்க்களம் (உயிர்களின்) உள்ளமே ஆகும்,
பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும், கவிகை
குடை சந்திரன் (ஆவான்);
காதலி (அழகு) பொருந்திய இரதியே ஆவாள், அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்
முடி ஆகும், எப்போதும் விடாமல்
வீற்றிருக்கும் இடம் (பெண்களின்) அல்குல் ஆகும், என்று அறிஞர்
கூறுவர்.