உஜ்வாலா திட்டம் மூலம் 6 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு! : மோடி

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
modi bjp coucil - 2026

2016 மே முதல் உஜ்ஜாவாலா திட்டத்தில் 6 கோடி கேஸ் இணைப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது; கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் 10% அந்நிய செலவாணி சேமிப்பு – கேரள மாநிலம் கொச்சியில் பிபிசி நிறுவன விழாவில் பிரதமர் மோடி பேச்சு

இன்று மதுரையில் நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, கொச்சிக்குச் சென்றார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து திரிசூர் சென்றார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2016 முதல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு 6 கோடி காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு கோடி பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர்

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து எரிபொருள் வழங்குவதற்காக சிஎன்ஜி வழங்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. 400 மாவட்டங்கள் பைப்லைன் மூலம் காஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக அரசு எடுத்த நடவடிக்கை மூலம், இறக்குமதி 10 சதவீதம் குறைந்ததுடன், அன்னிய செலவாணி மிச்சப் படுத்தப் பட்டுள்ளது என்றார்.

திரிசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக.,வினரின் எழுச்சி மிகு கூட்டத்தைக் காண்பதில் ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.