
மதுரை : மதுரை மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஜூலை 10.ம் தேதி உதவித் தொகை ரூ. 1000 வழங்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவும் நோக்குடன் நிவாரனத் தொகை வழங்க உத்தரவிட்டது.
இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் குடும்ப அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையை காண்பித்து நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரவிச்சந்திரன்,மதுரை



