அலங்காநல்லூரில் விரைவில் கரும்பு அரவை…! கூட்டத்தில் முடிவு!

Published:

madurai sugar industry
madurai sugar industry
  • அலங்காநல்லூரில் விரைவில் கரும்பு அரவை தொடங்கும்
  • தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, நிர்வாக குழு த்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆலையின் மேலாண்மை இயக்குனர் செந்தில் குமாரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அலுவலக மேலாளர் பாலன் வரவேற்றார். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
இதில் ,தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020 – 21 ஆண்டிற்கான கரும்பு அரவை தொடங்க ஏற்பாடு செய்யப்படும். ஆலைக்கு ,கரும்பு அறுவடை செய்த 15 நாட்களில் கரும்பு கிரைய தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

கரும்பு பதிவுக்கான பயிர்கடன் ஏக்கர் ஒன்றுக்கு 58 ஆயிரம் வீதம் வணிக வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கரும்பு அறுவடை செய்வதற்கு தேவையான கூலி ஆட்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் ஆலை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு உரிய நேரத்தில் கரும்பு அறுவடை செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

கரும்பு மகசூல் அதிகப்படுத்த தரமான விதை கரும்புகள் வழங்கப்படும். சொட்டு நீர் பாசனம் முழு மானியத்துடன் அமைக்க தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு மானியங்கள் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் ஆலை மூலம் வழங்கப்படுகிறது.

எனவே ,கரும்பு விவசாயிகள் அனைவரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தங்களது நிலங்களில் கரும்புகளை பயிரிட்டு நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் தங்களது பகுதியில் அமைந்துள்ள கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டுமாறு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர், நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வக்கீல் பழனிச்சாமி, அப்பாஸ், நல்லமணி காந்தி, ராமச்சந்திரன், மொக்க மாயன் மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் ,அலுவலக கணக்கர் சக்கரபாணி நன்றி கூறினார்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img