ஆரோக்கிய சமையல்: முத்து கொழுக்கட்டை!

Published:

javarasi kozhukattai

முத்து கொழுக்கட்டை

தேவையானவை:
ஜவ்வரிசி – ஒரு கப்,
மைதா – 2 டீஸ்பூன்,
இஞ்சி,பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஜவ்வரிசியை தேவையான அளவு சுடுநீர் விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும் அழுத்தி பிசையவும். அத்துடன் மைதா, உப்பு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது சேர்த்து… கறிவேப்பிலை, கொத்தமல்லி கிள்ளி போட்டு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, எண்ணெய் விட்டுக் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக தயார் செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்…. முத்து கொழுக்கட்டை தயார்.

Related articles

Recent articles

spot_img