நாளைக்கு பணிக்கு திரும்பாவிட்டால்… அதே பள்ளியில் மீண்டும் பணியாற்ற இயலாது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
teachers strike - 2026

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்; நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என்றும், 28ம் தேதிக்கு பின்னர் பணிக்கு வருபவர்கள் அதே பள்ளியில் பணியாற்ற இயலாது என்றும் கூறியுள்ள பள்ளிக் கல்வித்துறை, காலியாக இருக்கும் இடத்தில்தான் அவர்கள் பணியில் சேர வேண்டியது இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

இதனிடையே, பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு!

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த கோர்க்கையில், நேரில் சந்தித்து தாங்கள் விளக்கம் தர வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினரை அழைத்து பேசவும் வேண்டுகோள் விடுத்துள்ள அது, ஜாக்டோ ஜியோவை வழிநடத்துவோர் அரசு பணியில் இல்லாததால் அப்பாவிகளை தூண்டி விடுகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடாமல் பள்ளிக்கு சென்று வரும் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.