திருப்பதி கோவிலில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடு!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் இந்தியா சற்றுமுன்
11 Sep12 Thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் 5, 19-அம் தேதிகளில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் நடைபெற்ற தொலைபேசி மூலமாக பக்தர்களின் குறைகள் கேட்கும் நிகழ்ச்சியில் பேசிய தேவஸ்தான முதன்மை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் இதனை கூறினார். 5 மாதக் குழந்தை முதல் 1 வயது குழந்தைகள் உள்ள பெற்றோர் 6 மற்றும் 20- ஆம் தேதி இலவச தரிசனம் செய்யலாம் என்று கூறினார். அடுத்து, 5 மற்றும் 19 ஆம் தேதிகளில் முதியோரும் மாற்றுத் திறனாளிகளும் சிறப்பு தரிசனம் செய்யலாம் என்றார்.

ரூ. 60 லட்சம் செலவில் தலைமுடி செலுத்தும் கல்யாண கட்டா அலுவலக பவனம், காலணிகள் வைக்கும் அறைகள் ஆகியவை புதிதாக கட்டப்பட உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.86.12 கோடி என தெரிவித்தார் அனில்குமார் சிங்கால்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.