தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆனார் கே.எஸ்.அழகிரி!

சற்றுமுன் தமிழகம்
kcalagiri congress - 2026

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் கமிட்டி தலைவராக கட்சித் தலைமை நியமித்துள்ளது. குஷ்பு இந்தப் பதவிக்கு நியமிக்கப் படுவார் என்று தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத் தக்கது.

மேலும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 3 பேர் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் உள்பட காங்கிரஸ் கமிட்டிக்கு நான்கு செயல் தலைவர்களாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். இதனை பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.