தப்பித்த சின்னத்தம்பி யானை; தேடி வரும் வனத் துறையினர்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
elephant - 2026

சின்னத்தம்பி யானை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்தது

! இதை அடுத்து ரேடார் உதவி மூலம் யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

முன்னதாக, 100 கி.மீ.,க்கு மேல் உணவின்றி சுற்றித் திரிந்ததால் திருப்பூர் மடத்துக்குளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சின்னத்தம்பி யானை மயங்கி விழுந்தது.

கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள தென்னந் தோப்புகளில் புகுந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. யானையின் உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் இருப்பிடத்தை அறிந்து வனத்துறையினர் பின் தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சின்னத்தம்பி உடுமலை அருகே வந்தது. தன் இடத்தையும் உறவுகளையும் தேடித் தேடி கடந்த 3 நாட்களில் 100 கி.மீ.,க்கும் மேலாக சின்னத்தம்பி நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக இந்த யானை உணவின்றி சுற்றிவருவதால் களைப்படைந்து, திருப்பூர் மடத்துக்குளம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் மயங்கி விழுந்தது.

chinnathambi - 2026

ஆனால் வனத்துறையினரோ, யானை உணவு, தண்ணீரின்றி சுற்றி வருவதால் உடலளவில் சோர்வடைந்து படுத்து உறங்குகிறது. அது மயங்கவில்லை என்று கூறினர். .

இதனிடையே, சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

இந்நிலையில், யானை சின்னத்தம்பி, மீண்டும் வனத்துறையினர் கட்டுப் பாட்டில் இருந்து தப்பித்துச் சென்றது. அதனை ஜிபிஎஸ் கருவி மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.