கலாம் பெயரில் கல்லூரி! ராமேஸ்வரத்தில் அமையும்: ஓபிஎஸ்!

சற்றுமுன் சென்னை தமிழகம் வணிகம்
kalam modi - 2026

தமிழக நிதி நிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் அறிவித்து வருகிறார் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம். அப்போது அவர், கலாம் பெயரில் கல்லூரி அமையும் என்றார்.

ஓபிஎஸ்.,ஸின் பட்ஜெட் உரையில்…

2019-20ம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்

முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த 460.25 கோடி ஒதுக்கீடு

சர்வதேச தரத்திற்கு கல்வி நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்த தனியார் பல்கலை. நிறுவும் சட்டத்தை இயற்றியுள்ளோம்

அரசு பல்கலை. உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படும்

கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலை.க்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும்

உயர் கல்வித்துறைக்கு ரூ.4584.21 கோடி ஒதுக்கீடு

அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிற்றல் கல்வி இயக்கம் ஆகியவற்றின்கீழ் மத்திய அரசு நிதி தரவில்லை

நிதி உதவி கிடைக்காவிட்டாலும் தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

2019-20ம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு – ஓபிஎஸ்

குறைந்த செலவில் தரமான உயர் கல்வி பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்

29 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரி துவங்க அனுமதி வழங்கியுள்ளோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.