சந்தேகம் வந்த போதெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம்: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்!

பொது தகவல்கள் மதுரை லைஃப் ஸ்டைல்
naveen chawla - 2026

மதுரையில் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

மின்னணு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய போதெல்லாம், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. அப்போதெல்லாம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு எதுவும் செய்ய இயலாது என்பது நிருபணமாகியுள்ளது…

பல முறை மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது என்பதை உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் நிருபித்துள்ளோம் …

வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள VVPAT இயந்திரத்தில் 7 நொடிகளுக்கு வரிசை எண், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னமானது திரையில் காட்சிப் படுத்தப்படும்

லண்டனில் ஆய்வு செய்யப்பட்ட EVM வாக்கு இயந்திரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு இயந்திரம் அல்ல; எனவே சர்ச்சைகளுக்கு நாம் பதில் சொல்ல இயலாது என்று கூறினார்.

முன்னதாக, வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை தவிர்த்து பழைய வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப் பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.