நாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

admk pmk alliance - 2026

நாளை தைலாபுரம் தோட்டத்தில் அ.தி.மு.க. தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ராமதாஸ் வீட்டு விருந்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளையே அ.தி.மு.க. பா.ம.க. இடையிலான தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க.வுக்கு 5 என முடிவான நிலையில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் புதிய தமிழகம், ஐ.ஜே.கே. புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கி அ.தி.மு.க. வின் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைக்கவும் முடிவு செய்து உள்ளது.

ஆயினும் விஜயகாந்த் தரப்பு இன்னும் கூட்டணி குழப்பத்திலேயே உள்ளது. திமுக கூட்டணியில் கூடுதல் இடம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் கூட்டணி பேச்சுக்கள் தொடர்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.