மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியா சற்றுமுன்

parikkar modi - 2026

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் சேவையை வருங்கால சந்ததியினர் நினைவு கூறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், தேசிய தலைநகரம், மாநில தலைநகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என்று குடியரசுத் தலைவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது; திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் .க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமையை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.