நல்ல நாள், நேரம் பார்த்து, திருவாரூர் சந்நிதி தெருவில் இருந்து பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி

stalin tiruvarur - 2026

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தை திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்~!

இன்று பௌர்ணமி முழு நிறை நல்ல நாள் என்பதாலும், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று பெரியோர் கூறுவதன் அடிப்படையிலும், நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து இன்று காலை திருவாரூர் தெய்வ சந்நிதி முன்னுள்ள சந்நிதித் தெருவில் உள்ள தங்களது வீட்டின் முன்பிருந்து தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.

தொடர்ந்து, திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”33″ order=”desc”]


தனது வீட்டில் இருந்து பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின், வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது சிறுமிகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஸ்டாலின், மக்களிடம் கைகுலுக்கி ஓட்டு கேட்டார்.

ஏப்.,6 ஆம் தேதி வரை முதல்கட்ட தேர்தல் பிரசாரம் செய்யும் ஸ்டாலின், ஏப்., 7 முதல் 16ஆம் தேதி வரை 2ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.


[poll id=”12″]


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.