
திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு வேடிக்கை பார்க்காது என்றும் இதுகுறித்து விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யபப்டும் என்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கடம்பூர் ராஜூ கூறியதாவது:
திரையுலகினர்களின் பிரச்சனையை தீர்க்க தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் ஆகிவை அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும், திரையுலகினர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.



