பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டி! தமிழக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்தியா சற்றுமுன்

modi superb - 2026

பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக., வெளியிட்டுள்ளது.

தலைநகர் தில்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் ஜேபி .நட்டா, 184 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

இதன்படி, பிரதமர் நரேந்திரமோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்,

பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா முன்னர் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

லக்னோவில் ராஜ்நாத் சிங், நாக்பூரில் நிதின் கட்கரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மீண்டும் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார்.

நடிகை ஹேமாமாலினி மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலும் அப்போது வெளியிட பட்டது.

அதன்படி, கன்னியாகுமரி தொகுதியில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி இடுகிறார்.

தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,

கோயம்புத்தூரில் சி.பி.ராதாகிருஷ்ணன்,
ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன்
சிவகங்கை தொகுதியில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.