குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி இல்லாத தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், அரசு பள்ளிகளில் எவ்வித கட்டணமும் வாங்காமல் அனைத்து வசதிகளும் செய்து தரும் நிலையில், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தில் அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.



