
செல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைப்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் செல்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா வேலைகளையும் செல்போன் மூலமே செய்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.
செல்போன்களின் பயன்பாட்டில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே அளவுக்கு உடல் நலத்துக்கு தீங்கும் ஏற்படுகிறது.
செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
உயில் விசையியல் (பயோ மெக்கானிக்ஸ்) அடிப்படையில் உடலியக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களின் தலையின் பின்புறம் மண்டைக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை கண்டறிந்ததுள்ளனர்.
செல்போன்களை பயன்படுத்தும் போது அதன் தொடு திரையைப் பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொள்ள வேண்டி உள்ளது.
இதனால் தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாற்றுகிறது. இதனால் எலும்பு தசை நாண்கள், தசை நார்கள் வளர்ந்து மண்டை ஓட்டுக்குப் பின்புறத்தில் உள்பகுதியில் கொம்பு போன்ற தூண்டுதல் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதை உறுதி செய்வதற்கு ஆயரத்துக்கும் மேற்பட்ட எக்ஸ்-ரேக்களை எடுத்து ஆய்வு செய்தனர்.
இதில், இளைஞர்களின் மண்டைக்குள் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்வதை உறுதி செய்துள்ளனர்.
செல்போன் அதிக நேரம் பயன்படுத்தும் வாலிபர்கள், தங்கள் தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால் உள்ளுக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு துருத்திக்கொண்டு வளர்வதை உணர முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



